தமிழக ஆளுநர் டெல்லி பயணம் : பதவியேற்ற பின் முதன்முறையாக குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
23 September 2021, 7:06 pm
RN RAvi Meet President -Updatenews360
Quick Share

டெல்லி : தமிழக ஆளுநராக பதவியேற்றவுடன் முதன்முறையாக ஆர்.என்.ரவி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டார். இதையடுத்து தமிழக ஆளுநராக யார் பொறுப்பேற்பார் என்ற எதிர்பார்ப்பு தமிழகத்தில் எழுந்தது.

இந்த நிலையில் புதிய ஆளுநராக ஆர்.என் ரவி அறிவிக்கப்பட்டார். பின்னர் கடந்த 18ஆம் தேதி தமிழக ஆளுநராக பதவியேற்றார். இந்த நிலையில் ஆளுநராக பதவியேற்ற பின் முதன்முறையாக டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

டெல்லி சென்ற தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்ததை சந்தித்தார். இதைத்தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 158

0

0