காஷ்மீரிலிருந்து வெளியேற்றப்படும் 10,000 துணை ராணுவ வீரர்கள்..! எதற்காக இந்த திடீர் முடிவு..?

20 August 2020, 8:52 am
CAPF_Movement_UpdateNews360
Quick Share

ஜம்மு காஷ்மீரில் இருந்து சுமார் 10,000 துணை ராணுவ வீரர்களை உடனடியாக திரும்பப் பெறுமாறு நேற்று உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மத்திய ஆயுத போலீஸ் படைகளை (சிஏபிஎஃப்) ஜம்மு காஷ்மீரில் நிலைநிறுத்துவதை உள்துறை அமைச்சகம் பரிசீலித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அரசியலமைப்பின் 370’வது பிரிவை ரத்து செய்ததன் பின்னர் கூடுதல் துருப்புக்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள்துறை அமைச்சகம் கடைசியாக மே மாதத்தில் 10 சிஏபிஎஃப் பட்டாலியன்களை காஷ்மீரில் இருந்து திரும்பப் பெற்றது. அதே நேரத்தில் இதுபோன்ற 72 யூனிட்டுகள் கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியேற்றப்பட்டன.

மொத்தம் 100 சிஏபிஎஃப் யூனிட்கள் தற்போது உடனடியாக திரும்பப் பெற உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நாட்டில் உள்ள அவர்களின் வழக்கமான பணியிடங்களுக்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் உள்துறை அமைச்சக அறிவுறுத்தல்கள் படி, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் (சிஆர்பிஎஃப்) 40 யூனிட்களும், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை, எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் சாஷஸ்திர சீமா பால் ஆகியவற்றின் 20 யூனிட்களும் இந்த வாரத்திற்குள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்படும் எனத் தெரிகிறது.

இந்த யூனிட்களை டெல்லி மற்றும் பிற இடங்களுக்கு விமானம் மூலம் மாற்றுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு சிஆர்பிஎஃப் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு சிஏபிஎஃப் யூனிட் என்பது சுமார் 100 வீரர்களின் செயல்பாட்டு வலிமையைக் கொண்டுள்ளது.

“திரும்பப் பெறப்படும் யூனிட்கள் ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் ஆகிய இரு பகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. ஜம்மு காஷ்மீரில் எதிர்-கிளர்ச்சி மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளால் தீவிரவாதம் மிகவும் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த கூடுதல் யூனிட்கள் ஓய்வு, மீட்பு மற்றும் பயிற்சிக்காகத் திரும்பப் பெறப்படுகிறது” என ஒரு மூத்த சிஏபிஎஃப் அதிகாரி தெரிவித்தார்.

மேலும், குளிர்காலம் விரைவில் துவங்குவதால், இந்த யூனிட்களை குறிப்பாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் மேக்-ஷிப்ட் மற்றும் தற்காலிக குடியிருப்பு பிரிவுகளில் வைத்திருப்பது ஒரு கடினமான பணியாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

Views: - 22

0

0