ஆதார் தரவுகளை பயன்படுத்துகிறதா கூகுள் பே..? டெல்லி உயர்நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்..!
18 September 2020, 6:24 pmகூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று, ஆதார் தரவுத்தளத்தை அணுக முடியாது என்றும் அதன் கூகுள் பே (ஜிபே) மொபைல் செயலியை இயக்குவதற்கு இதுபோன்ற எந்த தகவலும் தேவையில்லை என்றும் கூறினார்.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என்.படேல் மற்றும் நீதிபதி பிரதீக் ஜலான் ஆகியோரின் பெஞ்ச் முன் கூகுள் சமர்ப்பித்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. கூகுள் பே முற்றிலும் ஒரு தனி தயாரிப்பு என்றும் இது பீம் ஆதார் உடன் இணைக்கப்படவில்லை எனவும் கூகுள் மேலும் தெரிவித்துள்ளது.
“கூகுள் பே பயனரின் ஆதார் விவரங்கள் எந்த வகையிலும் தேவையில்லை என்று மேலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே ஆதார் தரவுத்தளத்தை அணுக வேண்டிய அவசியமில்லை அல்லது ஆதார் தரவுத்தளத்தை அணுகவும் இல்லை” என்று கூகுள் தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளது.
கூகுளின் பிரமாணப் பத்திரத்தின்படி, நிதி பொருளாதார நிபுணர் அபிஜித் மிஸ்ரா தனது பொதுநல மனுவில் தாக்கல் செய்துள்ள மறுபரிசீலனை அறிக்கையில், கூகுள் பே ரிசர்வ் வங்கியின் தேவையான அங்கீகாரமின்றி நிதி பரிவர்த்தனைகளுக்கு உதவுவதாகக் கூறியது.
ஆனால் வழக்கறிஞர் பயல் பஹ்ல் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் மிஸ்ரா, கூகுள் பே பணம் செலுத்துதல் மற்றும் தீர்வுச் சட்டத்தை மீறும் வகையில் பணம் செலுத்தும் முறை வழங்குநராக செயல்பட்டு வருவதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து அக்டோபர் 22’ம் தேதிக்கு இதன் விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
0
0