பேரனுக்கு மணமுடிக்க 14 வயது பேத்தியை கடத்திய பாட்டி : வலை வீசி தேடும் போலீஸ்!!

11 July 2021, 12:36 pm
14 years Ol Kidnap- Updatenews360
Quick Share

ஆந்திரா : பேரனுக்கு மணமுடிப்பதற்காக 14 வயது பேத்தியை சிறுமி என்று கூட பாராமல் கடத்திய பாட்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இளம் பெண்கள் பல்வேறு காரணங்களுக்காக கடத்தி செல்லப்பட்ட சம்பவங்கள் நாட்டில் ஏராளமான அளவில் நடைபெற்றுள்ளன. ஆனால் ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள திருச்சானூரை சேர்ந்த பாட்டி ஒருவர் தன்னுடைய மகள் வயிற்றுப் பேத்தியை மகன் வழி பேரனுக்கு மனம் முடிப்பதற்காக கடத்திச் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் கடத்தப்பட்ட சிறுமிக்கு வயது 14 என்பது குறிப்பிடத்தக்கது. திருச்சானூரை சேர்ந்த நந்தினி 14 வயது சிறுமியின் பாட்டி வகுளம்மா. சிறுமி நந்தினி வகுளம்மாவின் மகள் வழி பேத்தி ஆவார்.

வகுளம்மாவின் மகன் வழி பேரன் முரளி கிருஷ்ணாவிற்கு திருமணம் முடிப்பதற்காக 14 வயது சிறுமி என்றும் பாராமல் தன்னுடைய சொந்த பேத்தியை வகுளம்மா நான்கு நாட்களுக்கு முன் ரகசியமாக கடத்தி சென்றுவிட்டார்.

அப்போது முதல் அவருடைய மகன் ஆதிநாராயணன், மருமகள் லிங்கம்மா பேரன் முரளி கிருஷ்ணா ஆகியோரையும் காணவில்லை. இதுதொடர்பாக கடத்தப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் வகுளம்மா கடத்தப்பட்ட சிறுமி நந்தினி, ஆதிநாராயணன், லிங்கம்மா, முரளி கிருஷ்ணன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 148

1

0