சிறுத்தையை அடித்தே விரட்டிய ‘சிங்கப்பாட்டி’ : மூதாட்டியின் துணிச்சல் வீடியோ வைரல்!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2021, 2:31 pm
மும்பை : வீட்டிற்கு வெளியே அமர்ந்த போது தாக்க வந்த சிறுத்தையை அடித்தே துரத்திய மூதாட்டியின் துணிச்சலான வீடியோ வைரலாகி வருகிறது.
மும்பையில் மூதாட்டி ஒருவர் வீட்டின் வெளியே அமர வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே பதுங்கியிருந்த சிறுத்தை மூதாட்டியை தாக்க காத்திருந்தது. இதையறியாத மூதாட்டி கைத்தடி தாங்கலுடன் வெளியே வந்து அமர்ந்துள்ளார்.
அப்போது அவரை தாக்க வந்த சிறுத்தையை பார்த்து அதிர்ந்து போன மூதாட்டி உடனே தனது கையில் இருந்த கைத்தடியை வைத்து சிறுத்தையை தாக்கினார். உடனே அந்த சிறுத்தை பயந்து அருகில் நின்றது.
இதையடுத்து மூதாட்டியின் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் சிறுத்தை அங்கிருந்து தப்பியோடியது. முறத்தால் புலியை விரட்டிய தமிழச்சியின் கதையை கேட்டிருப்போம். இது போலவே தனது கைத்தடியால் சிறுத்தையை விரட்டிய மூதாட்டியின் தைரியத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோவை வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பதிவிட்டுள்ளார்.
0
0