‘சூடித் தந்த சுடர்கொடியாள்’.. திருப்பதி ஏழுமலையானுக்காக ஸ்ரீ வில்லிப்புத்தூரில் இருந்து வந்த பச்சைக்கிளி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 9:29 pm
Srivilliputhur Tirupati - Updatenews360
Quick Share

பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நடைபெறும் கருட வாகன சேவை அன்று உற்சவருக்கும் மூலவருக்கும் அலங்கரிப்பதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகளை திருப்பதி மலைக்கு கொண்டு வருவது வழக்கம்.

ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மலர் மாலைகள் பின்னர் பெருமாளுக்கு அணிவிக்கப்படுவதால் ஆண்டாளுக்கு சூடிக்கொடுத்த சுடர்கொளியாள் என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.

புராண காலத்தில் ஆண்டாளுக்கு சூட்டப்பட்ட மாலைகள் பெருமாளுக்கு மீண்டும் சூடப்பட்டதை நினைவூட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி ஏழுமலையான் கோவில் கருட வாகன சேவை நடைபெறும் அன்று ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்படும் மலர் மாலைகள் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

அந்த வகையில் நாளை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஆண்டாளுக்கு சூடப்பட்ட மலர்மாலைகள், இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சை கிளிகள், மலர் ஜடை,பட்டு வஸ்திரம், மங்களப் பொருட்கள் ஆகியவை திருப்பதி மலைக்கு கொண்டுவரப்பட்டன.

அவற்றை இணை ஆணையர்,சுதர்சன், செல்லதுரை நிர்வாக அதிகாரி, முத்துராஜா தக்கார், ரவிச்சந்திரன் ஸ்தலத்தார், ரமேஷ் பிரசன்ன வெங்கடேசன் சுதர்சன் ஆகியோர் ஏழுமலையான் கோவில் எதிரில் இருக்கும் ஜீயர் மடத்தில் நடத்தப்பட்ட சிறப்பு பூஜைகளுக்கு பின் கோவில் மரியாதைகளுடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஜீயகளிடம் ஒப்படைத்தார்.

ஜீயர்கள் அவற்றை ஏழுமலையானுக்கு சமர்ப்பித்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர்மாலைகள் இன்று நடைபெற இருக்கும் கருட வாகன சேவையை முன்னிட்டு மூலவர் ஏழுமலையானுக்கும், கருட வாகன சேவையில் எழுந்தருள இருக்கும் உற்சவர் மலையப்ப சாமிக்கு அலங்கரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலர் ஜடை, இலைகளால் தயார் செய்யப்பட்ட பச்சைக்கிளி ஆகியவை நாளை காலை திருப்பதி மலையில் நடைபெற இருக்கும் மோகினி அலங்கார ஊர்வலத்தில் உச்சவருக்கு அலங்கரிக்கப்படும்.

Views: - 384

0

0