கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1.16 லட்சம் கோடி; நிதி அமைச்சகம் அறிவிப்பு

Author: Udayaraman
1 August 2021, 11:42 pm
GST_UpdateNews360 (2)
Quick Share

நாட்டில் கடந்த ஜூலையில் மொத்த ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1,16,393 கோடி என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ‘2021, ஜூலை மாதத்தில் நாட்டின் சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) வருவாய் ரூ.ஒரு லட்சத்து 16ஆயிரத்து 393 கோடி வசூலாகியுள்ளது. கடந்த 8-வது மாதங்களுக்குப்பின் ஜிஎஸ்டி வரி வருவாய் ஒரு லட்சம் கோடிக்கும் கீழ் கடந்த மாதம் சரிந்த நிைலயில் மீண்டும் ஜூலை மாதம் ஒரு லட்சம் கோடியை எட்டியுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.87,422 கோடி வசூலாகிய நிலையில் அதைவிட 33 சதவீதம் இந்த ஆண்டு ஜூலை மாதம் வசூலாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரச் சூழல் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து விடுபட்டு விரைவாக மீட்சி நிலையை நோக்கி நகர்ந்து வருவதன் எதிரொலியாகவே ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல்ஒரு லட்சம் கோடியைக் கடந்துள்ளது. இதே போன்ற ஜிஎஸ்டி வரி வசூல் அடுத்தடுத்து மாதங்களும் தொடரும்.ஜூலை மாதத்தில் ஜிஎஸ்டி வரி ரூ.ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 393 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டி வரி ரூ.22 ஆயிரத்து 197 கோடியாகும். மாநில ஜிஎஸ்டி வரி ரூ.28 ஆயிரத்து 541 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி வரி ரூ.57 ஆயிரத்து 864 கோடியாகும்.இதில் செஸ் வரியாக ரூ.7 ஆயிரத்து 790 கோடி கிடைத்துள்ளது. ” இவ்வாறு நிதிஅமைச்சகம் தெரிவித்துள்ளது.

Views: - 109

0

0