இந்தியப் பெருங்கடலில் எண்ணெய்க் கசிவு..! மொரீசியஸுக்கு மீட்புக் குழுவை அனுப்பியது இந்திய அரசு..!
16 August 2020, 3:08 pmமொரீசியஸுக்கு எண்ணெய் கசிவு தடுப்பு நடவடிக்கைகளை கையாள்வதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற 10 இந்திய கடலோர காவல்படை (ஐ.சி.ஜி) வீரர்களைக் கொண்ட தொழில்நுட்ப குழுவை இந்தியா அனுப்பியுள்ளது.
தேவையான தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு உதவிகளை விரிவுபடுத்துவதற்கான முடிவு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான உதவிகளையும் பேரழிவு நிவாரணங்களையும் விரிவுபடுத்துவதற்கான இந்தியாவின் கொள்கையின்படி, சாகர் (பிராந்தியத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) பற்றிய பிரதமரின் பார்வையால் வழிநடத்தப்படுகிறது.
தென்கிழக்கு கடற்கரையில் எண்ணெய் கசிவு காரணமாக சுற்றுச்சூழல் நெருக்கடியை சமாளிக்க மொரீஷியஸ் அரசாங்கம் உதவி கோரியதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் பாயிண்ட் டிஸ்னியில் இருந்து சுமார் 1,000 டன் எரிபொருள் எண்ணெயை ஏற்றிவந்த, ஜப்பானியருக்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல், கடந்த வாரம் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மொரீசியஸ் அருகே பழுதடைந்த நிலையில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டது. இதனால் பவளப்பாறைகள், மீன் மற்றும் பிற கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டது.
சில விஞ்ஞானிகள் நாட்டின் மிக மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு என்று அறிவித்துள்ள நிலையில், மொரீசியஸ் தனது உள்ளூர் மக்களைக் கொண்டு ஒரு பெரிய தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை தற்போது மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், ஜப்பானிய கப்பல் உடைந்து விட்டது மற்றும் மொரீஷியஸ் தேசிய நெருக்கடி குழுவின் கூற்றுப்படி, சனிக்கிழமை அதிகாலையில் அதன் நிலை மோசமடைந்தது. அதைத் தொடர்ந்து பிற்பகலுக்குள் அது முழுவதும் உடைந்தது.
அரசாங்கத்தின் கூற்றுப்படி, கப்பலில் இருந்து பெரும்பாலான எண்ணெய் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மதிப்பீடுகளின்படி, இன்னும் 166 டன் எரிபொருள் எண்ணெய் உள்ளே இருக்கிறது.
சுற்றுச்சூழல் பேரழிவு குறித்து பதிலளித்த ஜப்பானிய சுற்றுச்சூழல் அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி, சேதத்தை மதிப்பிடுவதற்காக டோக்கியோ அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் பிற நிபுணர்களை அனுப்பும் என்று கூறியுள்ளார்.
மொரீசியஸ் அரசாங்கம் அதன் எரிபொருள் கப்பலை காலி செய்ய ஏன் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை விளக்க கடுமையான அழுத்தம் உள்ளது. இதற்கிடையில், மெதுவான நடவடிக்கைகளுக்கு மோசமான வானிலையே காரணம் என பிரதமர் பிரவிந்த் ஜெகநாத் கூறியுள்ளார்.