ஹத்ராஸ் வழக்கில் புதிய திருப்பம்: ‘இளம்பெண்ணை குடும்பத்தினரே கொன்றனர்’ திடுக்கிடும் கடிதம்….!!!

Author: Aarthi
8 October 2020, 4:06 pm
hadras new info - updatenews360
Quick Share

லக்னோ: ஹத்ராஸ் நகரில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் புதிய திருப்பமாக கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவர் போலீசுக்கு எழுதிய கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் நகரை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 14ம் தேதி 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இதனையடுத்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக, 4 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, மாநில அரசை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான சந்தீப் தாக்கூர் என்பவரை, இளம்பெண்ணின் குடும்பத்திற்கு தெரியும் என போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், ஹத்ராஸ் போலீசுக்கு சிறையில் இருந்தபடியே சந்தீப் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, நானும், இளம்பெண்ணும் நண்பர்கள். ஆனால், எங்களது நட்பு, அவரின் குடும்பத்திற்கு பிடிக்கவில்லை. இளம்பெண் கொல்லப்பட்ட நாளன்று, வயலில் இருந்த அவரை சந்திக்க சென்றேன். அப்போது தாயாரும், சகோதரரும் அங்கு இருந்தனர். இதனால், என்னை திரும்பி செல்லும்படி அவர் கூறியதால், திரும்பி வந்துவிட்டேன். பின்னர், எங்களது நட்பை பிடிக்காத தாயாரும், சகோதரரும், இளம்பெண்ணை கடுமையாக தாக்கியதாகவும், அதில் அவர் படுகாயமடைந்ததாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர்.

இளம்பெண்ணின் தாயாரும், சகோதரரும் தவறாக எங்கள் மீது தவறாக குற்றம்சுமத்தி சிறைக்கு அனுப்பியுள்ளார். நாங்கள் அப்பாவிகள். இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தி எங்களுக்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 47

0

0