சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி..!! சிறையில் வெளியே வந்த ப.சிதம்பரம் பேச்சு…

4 December 2019, 10:25 pm
P.chidhaparam-Updatenews360
Quick Share

டெல்லி: 106 நாட்களுக்கு பின் சுதந்திர காற்றை சுவாசிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது பல ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடர்ந்து சிறைவாசம் அனுபவித்து சிதம்பரம் தரப்பில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்ட எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவருக்கு உச்ச நீதிமன்றம ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்து வெளிவந்த சிதம்பரத்திற்கு காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அபப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், தன் நாளை பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாகவும், 106 நாட்களுக்கு பிறகு சுதந்திர காற்றை சுவாசிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறினார்.