பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் அனுமதி..! முழுமையான தடையை நீக்கியது ஹரியானா அரசு..!

9 November 2020, 12:03 pm
firecrackers_updatenews360
Quick Share

தீபாவளி தினத்தன்று ஹரியானாவில் உள்ள மக்கள் இரண்டு மணி நேரம் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பை ஹரியானா அரசு முழுவதுமாக தடை செய்வதாக அறிவித்திருந்த நிலையில் இந்த தளர்வு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த தளர்வுகளுக்குப் பிறகு வர்த்தகர்கள் இப்போது தீபாவளியில் இரண்டு மணி நேரம் பட்டாசுகளை விற்கலாம் என்று முதல்வர் கூறியுள்ளார்.

“மாசுபடுதலால் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே பட்டாசுகள் தொடர்பாக நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டும். ஆயினும், பட்டாசுகளை விற்க விரும்புவோருக்கு அவற்றை விற்கவும், வெடிக்கவும் அனுமதிக்க விரும்புகிறோம். இந்த இரண்டு மணி நேரத்தில் வர்த்தகர்கள் பட்டாசுகளை விற்க முடியும்.” என்று அவர் கூறினார்.

காற்று மாசுபாட்டின் அதிகரிப்புக்கு மத்தியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று மனோகர் லால் கட்டார் கூறினார்.

“ஹரியானாவில், தீபாவளியில் மக்கள் இரண்டு மணி நேரம் பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதிக்கப்படுவார்கள். காற்று மாசுபடுவதை அடுத்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு இணங்க இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

“மாசுபாடு காரணமாக, கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது. மாசுபாட்டைக் குறைப்பதற்கும், கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 21

0

0