துணை சபாநாயகரின் கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய விவசாயிகள்

12 July 2021, 10:54 pm
Quick Share

விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் ஹரியானா துணை சபாநாயகர் சென்ற கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரியும், பாஜக தலைவர்களைக் கண்டித்தும் விவசாயிகள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது கூட்டம் ஒன்றில் பங்கேற்றுவிட்டு வந்த துணை சபாநாயகர் ரன்பிர் கங்வாவின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் காரின் பின்பக்க கண்ணாடி சேதமடைந்த நிலையில், துணை சபாநாயகர் காயங்களின்றி தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Views: - 106

0

0