தனியார் துறை வேலைவாய்ப்பில் மாநில மக்களுக்கு 75% இட ஒதுக்கீடு..! ஹரியானா ஆளுநர் ஒப்புதல்..!

2 March 2021, 8:11 pm
Jobs_UpdateNews360
Quick Share

மாநிலத்தில் இருந்து வேலை தேடுபவர்களுக்கு தனியார் துறையில் 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஹரியானா கவர்னர் சத்யதியோ நரேன் ஆர்யா ஒப்புதல் அளித்துள்ளார் என்று முதல்வர் மனோகர் லால் கட்டார் இன்று தெரிவித்தார்.

ஹரியானாவில் ஆளும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் ஜனநாயக் ஜந்தா கட்சி அளித்த இந்த முக்கிய மசோதா, ஹரியானா சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு பிற்பகுதியில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

“ஹரியானா ஆளுநர் இன்று தனியார் துறையில் மாநில மக்களுக்கு 75 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். அரசாங்கம் அதை விரைவில் அறிவிக்கும்” என்று முதல்வர் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

ஹரியானா மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2020 தனியார் துறை வேலைகளில் ஒரு மாதத்திற்கு ரூ 50,000’க்கும் குறைவான சம்பளம் வழங்கும் பணிகளில் 75% இடங்களை மாநில மக்களுக்கே வழங்க வகை செய்கிறது.

இந்த ஒதுக்கீடு ஆரம்பத்தில் 10 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று மசோதா கூறுகிறது.

உள்ளூர் மக்களிடையே வேலையின்மையைக் கையாள்வதைத் தவிர, குறைந்த ஊதியம் பெறும் வேலைகளைத் தேடும் புலம்பெயர்ந்தோரின் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த சட்டம் ஊக்கப்படுத்தும் என்றும், இது உள்ளூர் உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி சேரிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வழிவகுக்கிறது என்றும் கூறினார்.

இந்த மசோதா மாநிலத்தில் உள்ள தனியார் நிறுவனங்கள், சங்கங்கள், அறக்கட்டளைகள் மற்றும் கூட்டு நிறுவனங்களை உள்ளடக்கியது. தகுதி வாய்ந்த நபர்கள் கிடைக்காதபோது தகுதியான உள்ளூர் வேட்பாளர்களுக்கு இது பயிற்சி அளிக்கிறது.

இது உள்ளூர் வேட்பாளர்களை மாநிலத்தில் குடியேறியவர்கள் என வரையறுக்கிறது. குடியேற்ற அந்தஸ்தைப் பொறுத்தவரை, ஒரு நபர் ஹரியானாவில் பிறக்க வேண்டும் அல்லது குறைந்தது 15 ஆண்டுகள் அங்கு வாழ்ந்திருக்க வேண்டும்.

ஆளுநர் அளித்த ஒப்புதலை ஹரியானாவின் இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான தருணம் என்று துணை முதல்வர் சவுதலா விவரித்தார்.

“இந்த புதிய சட்டத்தின் விதிகள் விரைவில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும்” என்று அவர் ஃபரிதாபாத்தில் கூறினார்.

Views: - 3

0

0