கோவாக்சின் சோதனை: முதல் தன்னார்வலராக பங்கேற்ற அரியானா சுகாதாரத்துறை அமைச்சர்…!!

20 November 2020, 4:06 pm
vaccine test - updatenews360
Quick Share

புதுடெல்லி: கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக பங்கேற்ற அரியானா சுகாதாரத்துறை அமைச்சர் தன்னை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார்.

இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் என்ற கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு சோதிக்க இந்திய மருத்துவ ஆய்வு கழகம் அனுமதி வழங்கியுள்ளது. முதலாம் கட்ட மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் வெற்றி பெற்றதை அடுத்து, மூன்றாம் கட்ட சோதனைக்கும் அனுமதி வழங்கப்பட்டது.

Corona_Vaccine_UpdateNews360

அதன்படி நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் மூன்றாம் கட்ட பரிசோதனைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், அரியானாவில் கோவேக்சின் மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனை இன்று தொடங்கியது.

இதில், முதல் தன்னார்வலராக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ் (67) பங்கேற்று, தனது உடலில் தடுப்பூசியை செலுத்தி பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். அம்பாலா கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாநிலத்தில் நடைபெறும் 3ம் கட்ட கோவாக்சின் தடுப்பூசி பரிசோதனையில் முதல் தன்னார்வலராக நான் இருப்பேன் என அனில் விஜ் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

கோவாக்சின் மூன்றாம் கட்ட சோதனையில் நாடு முழுவதும் 26,000 பேர் வரை ஈடுபடுத்தப்படுவார்கள் என பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பரிசோதனையில், அனைத்து தரப்பு மக்களையும் கொண்டு சோதனை செய்யப்பட்ட பிறகு தடுப்பூசி பயனுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 29

0

0