மோடியின் ஆலோசனையின் பேரில் அறிவிக்கப்பட்டதா..? 8 கட்ட தேர்தலால் விரக்தியடைந்த மம்தா பானர்ஜி..!

26 February 2021, 7:12 pm
mamata_banerjee_updatenews360 (2)
Quick Share

பாரதீய ஜனதா கட்சிக்கு ஏற்றவாறு மாநிலத்தில் எதிர்வரும் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்காளம் ஆகிய நான்கு மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கான தேர்தல் தேதிகளை அறிவித்த பின்னர், பத்திரிகையாளரிடம் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “தேர்தல் ஆணையத்தின் முடிவை நான் மதிக்கிறேன். ஆனால் மாவட்டங்களை ஏன் உடைக்கிறீர்கள். தெற்கு 24 பர்கானாக்கள் எங்கள் கோட்டையாகும்.

அங்கு வாக்களிப்பு 3 வெவ்வேறு கட்டங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோடி மற்றும் அமித் ஷாவின் வசதிக்கேற்ப இது செய்யப்பட்டுள்ளதா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் தேர்தல்கள் மார்ச் 27 முதல் 8 கட்டங்களாக நடைபெறும்.

294 உறுப்பினர்களைக் கொண்ட வங்காள சட்டசபைக்கான வாக்குப்பதிவு மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6, ஏப்ரல் 10, ஏப்ரல் 17, ஏப்ரல் 22, ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் எட்டு கட்டங்களாக நடைபெறும். மாதிரி நடத்தை விதிமுறை உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என அரோரா கூறினார்

“மேற்கு வங்கத்தை தங்கள் சொந்த மாநிலமாக கருதுமாறு தேர்தல் ஆணையத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன். பாஜகவின் பார்வையில் அல்ல” என்று மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.

“மத்திய உள்துறை அமைச்சர் நாட்டிற்காக பணியாற்ற வேண்டும். அவர் இங்கு தேர்தல்களுக்கு தனது அதிகாரங்களை தவறாக பயன்படுத்த முடியாது. நாங்கள் பிரதமரை வரவேற்கிறோம். ஆனால் மேற்கு வங்க தேர்தலுக்கான தனது அதிகாரங்களை அவர் தவறாக பயன்படுத்த முடியாது” என்று மம்தா பானர்ஜி மேலும் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தை மேலும் தாக்கிய மம்தா பானர்ஜி, “ஒரு மாநிலத் தேர்தலுக்காக மத்திய அரசு தங்கள் அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்த முடியாது. அவர்கள் அதைச் செய்தால், அது ஒரு பெரிய தவறு. பின்னர் அவர்கள் அதற்கான விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

நாங்கள் பொது மக்களே, நாங்கள் எங்கள் போரில் போராடுவோம். பணத்தை தவறாக பயன்படுத்துவதை நிறுத்த தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கிறோம். பாஜக அனைத்து மாவட்டங்களுக்கும் ஏஜென்சிகள் மூலம் பணத்தை ஏற்கனவே அனுப்பியுள்ளது.” எனக் கூறினார்.

ஏற்கனவே கட்சியிலிருந்து பலபேர் விலகியுள்ள நிலையில், மம்தா பானர்ஜியை தோல்வி பயம் வாட்டியெடுப்பதாகக் கூறப்படும் நிலையில், தேர்தல் 8 கட்டங்களாக அறிவிக்கப்பட்டதால் கடும் விரக்தியடைந்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, மேற்குவங்கத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் மோசமாக இருப்பதால் தான், பாதுகாப்பு கருதி 8 கட்டங்களாக நடத்துவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 21

0

0