“முதல்வர் தேஜஷ்விக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்”..! முடிவு வரும் முன்பே தம்பியை முதல்வராக்கிய தேஜ் பிரதாப்..!

9 November 2020, 3:29 pm
tejashwi_tejpratap_updatenews360
Quick Share

பீகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜ் பிரதாப் யாதவ் தனது தம்பி மற்றும் எதிர்க்கட்சியின் முதல்வர் வேட்பாளரான தேஜஷ்வி யாதவுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். தேஜஷ்வி இன்று தனது 32’வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HBD_CMTejashwi” என்று தேஜ் பிரதாப் யாதவ் ட்வீட் செய்துள்ளார். 

பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஆர்ஜேடி தலைமையிலான மாபெரும் கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும் என்று பல தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறி வருவதால், தேஜ் பிரதாப் தனது ட்வீட்டில் முதல்வர் என குறிப்பிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தேஜஸ்விக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் பல வாழ்த்து சுவரொட்டிகளும் பாட்னாவில் வைக்கப்பட்டுள்ளன.

அனைத்து 243 சட்டமன்ற இடங்களுக்கும் பீகாரில் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கையை எந்தவித சிக்கலும் இல்லாமல் முடிக்க இந்திய தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

முடிவுகளைப் பொருட்படுத்தாமல் நவம்பர் 10’ம் தேதி வாக்குகளை எண்ணும் நாளில் கொண்டாட்டங்கள் மற்றும் போட்டியாளர்களை நோக்கி முறைகேடான நடத்தையில் ஈடுபடும் கட்சித் தொண்டர்களுக்கு ஆர்.ஜே.டி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

“நவம்பர் 10’ஆம் தேதி தேர்தல் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது முழுமையான கட்டுப்பாடு, எளிமை மற்றும் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். முறையற்ற பட்டாசுகள், கொண்டாட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் நம் போட்டியாளர்களிடமோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களிடமோ நேர்மையற்ற நடத்தை எந்த விலையிலும் ஏற்றுக்கொள்ளப்படாது” என்று ஆர்ஜேடி ட்வீட் செய்துள்ளது.

Views: - 24

0

0