டிசம்பரில் கூடுதல் மழைக்கு வாய்ப்பு… வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பு ..!!

Author: Babu Lakshmanan
1 December 2021, 7:45 pm
Chennai rain - updatenews360
Quick Share

சென்னை : டிசம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் நடப்பாண்டில் பருவமழை நன்கு பெய்துள்ளது. குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கூடுதலாகவே பெய்துள்ளது. இதன் காரணமாக, நீர்நிலைகள் அனைத்து நிரம்பியுள்ளன. அதேவேளையில், சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. இதனால், வெள்ள பாதிப்பு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், டிசம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட கூடுதல் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 132க்கு மேல் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

மேலும், டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திர பிரதேச கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு கர்நாடகா ஆகிய இடங்களில் இயல்பை விட கூடுதலாக மழைப்பொழிவு இருக்கும் என்றும், வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் மழை இயல்பை விட குறைவாக இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Views: - 496

0

0