மூன்று மாநிலங்களில் கனமழை : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்..!

14 September 2020, 11:43 am
Quick Share

அடுத்த 3 நாட்களுக்கு மூன்று மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காலநிலை மாற்றம் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. கடந்த மாதம் வடமாநிலங்களில் வெளுத்து வாங்கிய கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

அதேபோல் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் மேக கூட்டங்கள் கூடி ஒட்டுமொத்தமாக கொட்டி தீர்த்த மழையால் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த சூழலில் தற்போது மேற்கு இந்திய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.

இதனால், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் பொதுக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Views: - 0

0

0