மராட்டியத்தில் கொட்டி தீர்க்கும் கனமழை: பேருந்து, ரயில் சேவை பாதிப்பு…!!

11 June 2021, 10:21 am
Quick Share

மும்பை: மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3வது நாளாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இந்தியாவில் தென்மேற்கு பரவமழை தொடங்கியுள்ளது. குறிப்பாக, மராட்டிய மாநிலத்தில் கடந்த 9ம் தேதி முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.

மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.

சில பகுதிகளில் கனமழையால் வீடுகள் இடிந்து உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தில் மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால் மராட்டியத்தில் மக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.

Views: - 174

0

0