மும்பையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: ரயில் சேவை கடும் பாதிப்பு..!!

20 July 2021, 9:44 am
Quick Share

மகாராஷ்டிரா: மும்பை, தானே மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் 2வது நாளாக பலத்த மழை பெய்து வருவதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் பலத்த மழை காரணமாக நேற்று காலை 10.35 மணி முதல் 10.50 மணி வரை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கல்வா- மும்ரா இடையே தண்டவாளத்தில் தண்ணீர் தேங்கியதால் மதியம் 3 மணி முதல் 3.35 மணி வரை மீண்டும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

விடாமல் பெய்த கனமழை காரணமாக நேற்று மின்சார ரயில்கள் மிகவும் குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டன. குறிப்பாக சி.எஸ்.எம்.டி. பகுதியில் அதிகளவு ரயில்கள் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டன. இதனால் பைகுல்லாவில் இருந்து சி.எஸ்.எம்.டி. செல்ல மின்சார ரயில்கள் சுமார் 30 நிமிடங்கள் எடுத்து கொண்டன.

இதனால் மின்சார ரெயில் பயணிகள் அவதி அடைந்தனர். தானே ரெயில் நிலையத்தை வெள்ளம் சூழ்ந்ததால் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதேபோல கசாரா மலைப்பகுதியிலும் நிலச்சரிவு ஏற்பட்டதாக எக்ஸ்பிரஸ் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

Views: - 99

0

0