திருப்பதியில் விடாமல் பெய்து வரும் கனமழை : ஏழுமலையானை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் அவதி!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2021, 4:34 pm
ஆந்திரா : திருப்பதி, திருமலையில் இன்று காலை முதல் தொடர் கனமழை பெய்து வருவதால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி, திருமலை ஆகிய ஊர்கள் உட்பட ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் இன்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருப்பதி, திருமலையில் பெய்துவரும் கனமழை காரணமாக சாமி தரிசனத்திற்காக வந்திருக்கும் பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி உள்ளனர்.
குறிப்பாக திருப்பதி மலையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பக்தர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு செல்வது,கோவிலில் இருந்து அறைகளுக்கு செல்வது உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இன்று காலை முதல் அவதியடைந்து உள்ளனர்.
0
0