காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய ஆட்டு மந்தை : அடுத்தடுத்து ஆற்றில் விழுந்த பரிதாபம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 October 2021, 2:07 pm
Goat Fell In River -Updatenews360
Quick Share

ஒரு ஆடு பள்ளத்தில் குதித்தால், ஏன் எதற்கு என்று யோசிக்காமல் மற்ற ஆடுகளும் அதே பள்ளத்தில் குதிக்கும் என்ற பழமொழி வழக்கத்தில் உள்ளது.

செம்மறி ஆடுகள் பற்றிய இந்த பழமொழியை நிரூபிக்கும் வகையிலான சம்பவம் ஒன்று தெலுங்கானா மாநிலம் நாகர்கோவில் அருகிலுள்ள மன்னிவாரிபள்ளி கிராமத்தில் நடைபெற்றது.

ஆடுகளை மேய்க்க ஒருவர் தன்னுடைய ஆட்டு மந்தையை மண்னி வாரி பள்ளி வழியாக மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். கண்டி நதியை தாண்டும்போது ஒரு ஆடு மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் கண்டி நதியில் உள்ள தாழ்வான பகுதியில் குதித்தது.

அதனை பார்த்த மற்ற ஆடுகளும் அதே பள்ளத்தில் குதித்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. உயிரை காப்பாற்றிக்கொள்ள ஆட்டு மந்தை கரையேற முயற்சிப்பதை கவனித்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவற்றை இழுத்து கரை சேர்த்தனர்.

Views: - 447

0

0