வெள்ளக்காடாக காட்சியளிக்கும் இமாச்சல்… சுருட்டி வீசப்பட்ட வீடுகள், பாலங்கள் ; இயற்கையின் கோர தாண்டவம் ; அதிர்ச்சி வீடியோ..!!

Author: Babu Lakshmanan
10 July 2023, 2:29 pm
Quick Share

இமாச்சல் பிரதேசத்தில் கொட்டி தீர்க்கும் கனமழையினால் பெரும் வெள்ளம் ஏற்பட்டு, அம்மாநிலத்தில் அதிகளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இமாச்சல் பிரதேசத்தில் பேய் மழை கொட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் வெள்ளம் கரைபுரண்டோடுவதால் அம்மாநிலத்தின் கட்டமைப்புகள் பெரும் சேதத்திற்குள்ளாகியுள்ளது. சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தினால், பாலங்கள் அடித்து செல்லப்பட்டன. வாகனங்கள் மற்றும் வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

இமாச்சல பிரதேசத்தில் மட்டும் கடந்த இரு தினங்களில் பெய்த மழையில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், கனமழை அச்சுறுத்தல், வெள்ளத்தால் மாநிலம் சுருட்டி வீசப்பட்ட நிலையில், மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:- அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். வெள்ளத்தில் யாரேனும் சிக்கியிருந்தால் 1100, 1070, 1077 ஆகிய மூன்று உதவி எண்களை அணுகலாம். உங்களுக்காக நான் எந்த நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார்.

Views: - 258

0

0