தோண்ட தோண்ட சடலங்கள் : இமாச்சல் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்..!!

Author: Babu Lakshmanan
11 August 2021, 7:29 pm
Himachal landslide - updatenews360
Quick Share

இமாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஏராளமானோர் சிக்கியுள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தொடர் கனமழை காரணமாக இமாச்சலப் பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டன. இந்த நிலையில், கின்னார் மாவட்டத்தின் ரெக்காங் பியோ – சிம்லா தேசிய நெடுஞ்சாலையில் இன்று பிற்பகலில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், சரக்கு வாகனம், பேருந்து உள்பட சில வாகனங்கள் சிக்கின. இது குறித்து தகவல் அறித்த இந்தோ – திபெத் எல்லை காவல் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலச்சரிவில் 60க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில், 10க்கும் மேற்பட்டோர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்கும் பணி நடந்து வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.

முன்னதாக, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய்ராம் தாகூரை தொடர்புகொணடு நிலச்சரிவு தொடர்பாக கேட்டறிந்தனர்.

Views: - 488

0

0