கொரோனாவுக்கு ‘குட் – பை’ : டிஸ்சார்ஜ் ஆனார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!!

14 August 2020, 7:13 pm
amitshah_updatenews360
Quick Share

டெல்லி : கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பூரண குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்கு மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடந்த 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதையடுத்து, அமைச்சர் அமித்ஷா தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.

இதனிடையே, கடந்த 9ம் தேதி அமித்ஷா குணமடைந்து விட்டதாக பா.ஜ.க., எம்.பி. மனோஜ் திவாரி தெரிவித்திருந்தார். ஆனால், இந்த அறிவிப்பிற்கு மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது.

இந்த நிலையில், அரியானா மாநிலத்தில் குருகிராம் நகரில் அமைந்துள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று குணமடைந்து விட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், மருத்துவர்கள் வழங்கிய அறிவுரையின்படி சில நாட்கள் அவர் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 10

0

0