சசிகலா உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!! ஆதரவாளர்கள் ஹேப்பி!!

29 January 2021, 12:59 pm
Sasikala Health - Updatenews360
Quick Share

கர்நாடகா : சசிகலா உடல்நிலை குறித்து பெங்களூரு விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற சசிகலாவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

கொரோனா வீரியம் குறைந்த நிலையில் ரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், சிகிச்சைக்கு சசிகலா ஒத்துழைப்பதாகவும் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

இந்த நிலையில் சசிகலாவுக்கு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு 272 ஆக உள்ளதால் இன்சுலின் மருந்து செலுத்தப்பட்டு வருவதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சசிகலாவின் உடலில் உள்ள சர்க்கரை அளவு இயல்பான அளவில் உள்ளதாகவும், ரத்தம் அழுத்தம் அதிகமாக உள்ளதாகவும் கூறியுள்ளது. 4வது நாளாக ஆக்சிஜன் சிலிண்டர் உதவியுடன் சசிகலா இயற்கையாக சுவாசித்து வருவதாகவும் அறிகுறிகள் இல்லாத கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 27ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில் வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 0

0

0