புலம்பெயர்ந்த ஏழை குழைந்தைகளுக்கு பாடம் எடுக்கும் வனஜா! வாழ்த்துக்கள் மேடம்…!

3 March 2021, 8:15 am
Quick Share

தெலுங்கானாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், ஸ்மார்போன் இல்லாததால், ஆன்லைன் வகுப்பில் பாடம் படிக்க முடியாத நிலையில், அவர்களின் நிலையறிந்த வனஜா என்ற 24 வயது பெண், அவர்களுக்கு காலை, மாலை வேளைகளில் பாடம் எடுத்து வருகிறார்.

தெலுங்கானாவில் உள்ள போங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வனஜா (வயது 24). இவரது தந்தை சிறுவயதிலேயே இறந்துவிட்டதால், அவரால் படிப்பை தொடர முடியவில்லை. இந்நிலையில், ஹனம்கொண்டா பகுதியில் உள்ள சேரி ஒன்றில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள், ஸ்மார்ட்போன் வாங்கமுடியாமல், ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க முடியாத ஏழ்மை சூழலில் இருப்பதை அறிந்திருக்கிறார். சத்தீஸ்கர், மகாராஷ்டிராவை சேர்ந்த இவர்களின் குடும்பம் கடந்த 20 ஆண்டுகளாக இந்த சேரிப்பகுதியில் தான் வசித்து வருகின்றன.

மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் 20 குழந்தைகளுக்கு, அவர்களின் இருப்பிடம் அருகே உள்ள திறந்தவெளியில் தினமும் காலை, மாலை என இரு வேளையும் அவர்களுக்கு இலவசமாக பாடம் எடுத்து வருகிறார். தன்னால் அந்த குழந்தைகளுக்கு உதவ முடிகிறதே என்ற திருப்தி ஏற்பட்டிருப்பதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் படிக்கும்போதே என் தந்தை இறந்துவிட்டார். என் தாயுடன் சேர்ந்து கடையை கவனித்து கொண்ட நான், படிப்பை தொடர முடியவில்லை. அவர்களுக்கு கல்வி கிடைக்க வேண்டும் என விரும்பிய நான், வகுப்பறைகள் இல்லாத போதும், திறந்தவெளியில் பாடம் எடுத்து வருகிறேன். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு கல்வி வழங்கி வருகிறேன்’’ என்றார்.

Views: - 10

0

0