ஒரு கப் டீ விலை ரூ. 1000 – அப்படி என்ன தான் அந்த டீயில இருக்கோ…

1 March 2021, 1:14 pm
Quick Share


ஒரு கப் டீயின் விலை ஆயிரம் ரூபாய் என்றால் நம்ப முடிகிறதா…நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் இந்த டீ வியாபாரி…
நாம் சோர்வாக உணரும் பட்சத்தில், ஒரு டீ குடிச்சா நல்லா இருக்கும் என்று நினைப்பது வழக்கமான ஒன்றுதான். டீயின் விலை ரூ. 10 -இல் இருந்து துவங்கி அதிகபட்சம் பெரிய கபேகளில் ரூ. 100 வரை இருப்பது நமக்கு தெரியும்.


மேற்குவங்க மாநில கொல்கத்தாவில் உள்ள சிறிய டீ கடையில், ஒரு டீயின் விலை, ரூ. 1000 என்ற அளவில் விற்கப்படுகிறது. இந்த டீயை குடிக்கவும், பலர் இந்த கடையை முற்றுகையிட்டு வருவது தொடர்கதையாக உள்ளது.


பார்த்தா பிரதிம் கங்குலி, தான் செய்துவந்த தொழிலில் திருப்தி இல்லாததால், மாற்றுத்தொழில் குறித்து சிந்தித்துக் கொண்டு இருந்த நிலையில், அவர் மனதில் ஏற்பட்டதே டீ விற்பனை. 2014-ஆம் ஆண்டில், நிர்ஜாஷ் என்ற பெயரில், சிறிய அளவிலான டீ கடையை துவங்கினார்.


விற்பனை சிறப்பாக இருந்தபோதிலும், புதுமையாக ஏதாவது செய்ய விரும்பிய பார்த்தா பிரதிம் கங்குலி, தனது கடையில் பல்வேறு விதமான டீ வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்காக களம் இறங்கினார்.

தற்போது இவரது டீ கடையில், ரூ. 12 முதல், ரூ. 1000 வரையிலான டீ வகைகளை விற்பனை செய்து வருகிறார்.  போ லே என்ற சிறப்பு வகை டீ தூள் கிலோ விலை ரூ. 3 லட்சம் என்ற அளவிற்கு உள்ளது. இந்த டீத் தூளால் போடப்பட்ட டீயின் விலையே, ரூ. 1000 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


இதுமட்டுமல்லாது, நிர்ஜாஷ் டீ கடையில், சில்வர் நீடில் ஒயிட் டீ, லாவண்டர் டீ, ஹைபிஸ்கஸ் டீ, ஒயின் டீ, துளசி இஞ்சி டீ, புளு திசானே டீ, டீஸ்டா வாலி டீ, மகாய்பாரி டீ, ருபயோஸ் டீ, ஒகேத்தி டீ என விதவிதமான டீ வகைககள் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 11

0

0