ராமர் பாலத்தின் உண்மையான வயது என்ன..? கட்டியது எப்படி..? முறையான ஆய்வுக்கு இந்திய தொல்லியல் ஆய்வு மையம் ஒப்புதல்..!

14 January 2021, 12:39 pm
ram_setu_updatenews360
Quick Share

இந்திய தொல்லியல் ஆய்வு மையம் (ஏ.எஸ்.ஐ) ராமர் பாலம் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி திட்டத்தை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தில் கடல் நீருக்கடியில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் இதன் மூலம் ராமர் பாலத்தின் வயது மற்றும் அது எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பதை தீர்மானிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆராய்ச்சி இந்த ஆண்டிலேயே தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு ஏ.எஸ்.ஐ.யின் கீழ் உள்ள தொல்பொருளியல் தொடர்பான மத்திய ஆலோசனைக் குழு ஒப்புதல் அளித்தது. இந்த திட்டத்தை கோவாவின் சி.எஸ்.ஐ.ஆர்-தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனம் உருவாக்கியது.

ராமர் பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் தீவு மற்றும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையேயான தீவுக்கூட்டங்களின் இணைப்பு ஆகும். கடந்த புவியியல் சான்றுகளின்படி, இந்த அமைப்பு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான முன்னாள் நில இணைப்பாக இருந்து வந்துள்ளது.

தேசிய கடல்சார் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் சுனில் குமார் சிங் கூறுகையில், தொல்பொருட்கள், ரேடியோமெட்ரிக் மற்றும் தெர்மோலுமினென்சென்ஸ் ஆகியவை மூலம் புவியியல் கால அளவுகோல் மற்றும் பிற துணை சுற்றுச்சூழல் தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ரேடியோமெட்ரிக் தொழில்நுட்பம் 48 கி.மீ நீளமுள்ள பாலத்தின் வயதை தீர்மானிக்க பயன்படுத்தப்படும். இந்த திட்டம் இந்து மத மற்றும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது குறிப்பிடத்தக்கது. ராமாயணத்தின் கூற்றுப்படி, ஒரு வானர சேனையால் முதலில் தனது மனைவி சீதையை மீட்பதற்கு ராமர் இலங்கைக்கு செல்ல உதவுவதற்காக கடலில் பாலம் கட்டியதாக நம்பப்படுகிறது.

தேசிய கடல்சார் ஆய்வு மையம் தனது ஆராய்ச்சி கப்பல்களான சிந்து சாதனா அல்லது சிந்து சங்கல்பைப் பயன்படுத்தி நீர் மட்டத்திலிருந்து 35-40 மீட்டர் அடியில் உள்ள வண்டல் மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வில் ஈடுபடும் எனக் கூறப்படுகிறது.

Views: - 12

0

0