வாட்ஸ்அப்பில் COVID-19 தடுப்பூசி முன்பதிவு செய்வதற்கான வசதி அறிமுகம்? முன்பதிவு செய்வது எப்படி? Book Vaccination Slot on Whatsapp
Author: Hemalatha Ramkumar24 August 2021, 4:16 pm
வாட்ஸ்அப் இப்போது உங்களுக்கு அருகிலுள்ள தடுப்பூசி மையத்தைக் கண்டுபிடித்து தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய அனுமதிக்கிறது. நாடு முழுவதும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் இப்போது அரசாங்கத்தின் MyGov கொரோனா ஹெல்ப் டெஸ்க் சாட்போட் மூலம் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து வருகின்றனர். உங்களுக்கு இந்த அம்சம் குறித்து தெரியவில்லை என்றால், இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் இந்த சாட்போட் கடந்த மார்ச் 2020 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, இது COVID-19 தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவும், கொரோனா வைரஸ் தொற்றுநோயைச் சுற்றியுள்ள தவறான தகவல்களைத் தடுக்கவும் உதவியாக இருந்தது.
தடுப்பூசி சான்றிதழ்களைப் பதிவிறக்கவும் பயனர்கள் இதே சாட்போட்டைப் பயன்படுத்தலாம். இப்போது வரை, பயனர்கள் CoWIN இன் வலைத்தளம் வழியாக தடுப்பூசி ஸ்லாட்டைப் பதிவு செய்ய முடிந்தது. ஆனால், இந்த வசதி இப்போது வாட்ஸ்அப்பிலும் வந்துள்ளது. அது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப்பில் தடுப்பூசி முன்பதிவு செய்வது எப்படி?
படி 1: பயனர்கள் 9013151515 என்ற WhatsApp எண்ணை தங்கள் தொலைபேசிகளில் சேமிக்க வேண்டும்.
படி 2: “Book Slot” என டைப் செய்து வாட்ஸ்அப்பில் இந்த எண்ணுக்கு அனுப்ப வேண்டும். இது அந்தந்த மொபைல் போன் எண்ணில் 6 இலக்க OTP ஐ அனுப்பும். நீங்கள் அரட்டையில் அந்த OTP ஐ அனுப்ப வேண்டும்.
படி 3: நீங்கள் OTP ஐ உள்ளிட்டவுடன், CoWIN இணையதளத்தில் பதிவுசெய்யப்பட்ட நபர்களின் பெயர்களை சாட்பாட் காட்டும்.
படி 4: நீங்கள் தடுப்பூசி ஸ்லாட்டை பதிவு செய்ய விரும்பும் பயனரின் எண்ணை இப்போது டைப் செய்து அனுப்ப வேண்டும். பாட் உங்கள் முந்தைய தடுப்பூசி விவரங்களைக் காண்பிக்கும்.
படி 5: இப்போது “Search by Pincode” என்ற விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும். பாட் நீங்கள் தடுப்பூசிக்கு பணம் செலுத்த வேண்டுமா அல்லது இலவசமாக பெற வேண்டுமா என்று கேட்கும்.
படி 6: நீங்கள் இப்போது உங்கள் பகுதியின் அஞ்சல் குறியீட்டை (PINCODE) உள்ளிட வேண்டும். நீங்கள் இப்போது உங்களுக்கு ஏற்ற இடம் மற்றும் தேதியை தேர்வு செய்து தடுப்பூசிக்கு முன்பதிவு செய்துக்கொள்ளலாம்.
0
0