மும்பை என்சிபி அலுவலக கட்டிடத்தில் தீ விபத்து..! ரியா வழக்கு ஆவணங்களை அழிக்கும் முயற்சியா..?
21 September 2020, 3:56 pmமும்பையின் பல்லார்ட் எஸ்டேட்டில் உள்ள எக்சேஞ் கட்டிடத்தில் இன்று பிற்பகல் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (என்.சி.பி) அலுவலகம் அமைந்துள்ள பல்லார்ட் எஸ்டேட்டில் உள்ள கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றன.
தீ விபத்தினால் எந்தவொரு சேதமும் அல்லது எந்தவிதமான காயமும் இதுவரை பதிவாகவில்லை. தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், என்.சி.பி அலுவலகமும் அதே கட்டிடத்தில் அமைந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். என்.சி.பி தற்போது சுஷாந்த் சிங் மரண வழக்கில் ரியா சக்ரவர்த்தியின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விசாரித்து வருகிறது.
இதனால் என்சிபி அலுவலககத்தில் உள்ள ரியா வழக்கு ஆவணங்களை அழிக்க மேற்கொண்ட முயற்சியா என ஒரு பக்கம் சந்தேகம் எழுப்பப்பட்டு வருகிறது.