நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் : ஒரேநேரத்தில் நதியை கடந்த டிரோன் கேமரா காட்சி..!

14 September 2020, 1:42 pm
Quick Share

சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா எல்லையில் நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் ஒரே நேரத்தில் அங்குள்ள நதியொன்றை கடந்து செல்லும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடமாநிலங்களான தெலுங்கானா, ஒடிசா, சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து உளவுத்துறையும் அவ்வப்போது தகவல்களை வெளியிட்டு வருகிறது. இதன் காரணமாக மாவோயிஸ்டுகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியை காவல் துறை தீவிரப்படுத்தியுள்ளது.

வனப்பகுதிகளுக்குள் மறைந்து திட்டமிட்டு தாக்குதல்களை நடத்த காத்திருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று சட்டீஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநில எல்லையில் உள்ள சுக்மா என்ற இடத்தில் போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டபோது, 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நதியை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். தொடர்ந்து தெலுங்கானா போலீசாருக்கும், ஒடிசா போலீசாருக்கும் இதுகுறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், சுக்மா மலைப்பகுதியில் வசிக்கும் மக்கள் யாரேனும் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை கண்டால் உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், மக்கள் பாதுக்காப்பாக இருக்க வேண்டும் என்றும் சட்டீஸ்கர் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Views: - 0

0

0