தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் : நெஞ்சை பதை பதைக்க வைத்த காட்சி!!

Author: Udayachandran
9 October 2020, 2:22 pm
Andhra Murder Attempt - Updatenews360
Quick Share

ஆந்திரா : தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் கழுத்த அறுத்த கணவனின் வீடியோ வெளியாகி பதை பதைக்க வைத்துள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த சிற்றூர் குண்ட்லபுரிஞ்சி.
குண்ட்லபுரிஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் பாபு ராவ் (வயது 25). அவருடைய மனைவி கிரன்மய் (வயது 22).

இரண்டு பேருக்கும் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் மனைவி நடத்தை மீது சந்தேகம் அடைந்த பாபுராவ் அவருடன் தினமும் சண்டை போட்டு வந்தார். நேற்று இரவும் இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கிரண்மய் மீது பாபுராவ் தாக்குதல் நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் இன்று அதிகாலை கிரண்மய் தூங்கி கொண்டிருந்த போது கத்தியை எடுத்து அவருடைய கழுத்தை கணவன் பாபுராவ் அறுத்தார். வலி தாங்க முடியாமல் கிரண்மய் எழுப்பிய கூக்குரலை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதற்கிடையே பாபுராவ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

போலீசார் அளித்த தகவலின் பேரில் விரைந்து சென்ற நிம்மல பள்ளி போலீசார், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கிரண்மயை மீட்டு தாங்கள் வாகனத்தில் மதனப்பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய பாபுராவை தேடி வருகின்றனர். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பெண் சிகிச்சை பெற்று வரும் காட்சிகள் வெளியாகி நெஞ்சை உறைய வைத்துள்ளது.

Views: - 55

0

0