மேலும் ஒரு சீனர் உட்பட இரண்டு பேர் கைது..! Online Lending Apps மோசடிக்கு கிடுக்கிப்பிடிபோடும் ஹைதராபாத் போலீஸ்..!

Author: Sekar
31 December 2020, 12:01 pm
Chinese_Arrested_Online_Lending_Apps_UpdateNews360
Quick Share

ஆன்லைன் உடனடி கடன் செயலிகள் மூலம் கடன் வாங்கி, திரும்பிச் செலுத்துவதில் கால தாமதம் ஏற்படும் வாடிக்கையாளர்களை துன்புறுத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை அடுத்து, ஆன்லைன் உடனடி கடன் வழங்கும் செயலிகளுக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக சீன நாட்டவர் உட்பட மேலும் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஹைதராபாத் போலீசார் பதிவு செய்த 27 வழக்குகளில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நிதி பரிவர்த்தனைகள் குறித்த முதற்கட்ட விசாரணையில், இதுவரை, 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 1.4 கோடி பரிவர்த்தனைகள் இதுவரை நடந்திருப்பது தெரியவந்துள்ளது என்று ஹைதராபாத் போலீசாரின் அறிக்கை தெரிவித்துள்ளது.

முன்னதாக டிசம்பர் 22’ம் தேதி, குர்கான், ஹரியானா மற்றும் ஹைதராபாத்தில் அமைந்துள்ள ஐந்து கால் சென்டர்களில் அதிரடி சோதனை மேற்கொண்டு 11 பேரை கைது செய்துள்ளதாக ஹைதராபாத் காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இது தான் ஆன்லைன் கடன் செயலிகளுக்கு எதிராக இந்தியாவில் எடுக்கப்பட்ட முதல் பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

ஹைதராபாத்தில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையம், அங்கீகரிக்கப்படாத கடன் செயலிகள் கடன் வாங்குபவர்களை துன்புறுத்துவது தொடர்பான 27 வழக்குகளை விசாரித்து வருகிறது.

இந்த வழக்குகளில் விசாரணை தீவிரமடைந்த நிலையில், இதில் தொடர்புடைய 27 வயதான சீன நாட்டைச் சேர்ந்தவர் நேற்று டெல்லி விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேற முயன்றபோது தடுத்து நிறுத்தப்பட்டார். காவல்துறையினர், நான்கு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆன்லைன் கடன் செயலிகளின் செயல்பாட்டுத் தலைவராக இந்த நபர் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

கால் சென்டர்களை இயக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

நிதி பரிவர்த்தனைகள் தொடர்பாக, இந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கட்டண சேவைகள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பாக இந்த பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிட்காயின்கள் மூலமாகவும் ஏராளமான சர்வதேச பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

கடந்த ஆறு மாதங்களில் மொத்தமாக நடந்துள்ள பரிவர்த்தனைகள் தொடர்பாக, மேலும் விசாரணை தொடர்கிறது என்று போலீசார் தெரிவித்தனர். இந்தியாவில் இந்த நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் மற்றொரு சீனர் தற்போது வெளிநாட்டில் உள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

டிசம்பர் 25 முதல், ஒரு பெண் உட்பட இரண்டு சீன நாட்டவர்கள் வெவ்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக ஒரு சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளது பரப்பரப்பைக் கூட்டியுள்ளதோடு, இதன் பின்னணியில் உள்ள சீன சதி குறித்த பகீர் உண்மைகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Views: - 60

0

0