ஐதராபாத் டூ சேலம்… தனியார் பேருந்தில் சிக்கிய வெள்ளிக்கட்டிகள், ரூ.11 லட்சம் ரொக்கம் : ஆந்திர போலீசார் அதிரடி!!!

Author: Udayachandran RadhaKrishnan
20 August 2021, 4:48 pm
Amount Seized -Updatenews360
Quick Share

தெலுங்கானா : ஹைதராபாத்தில் இருந்து சேலத்திற்கு உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லப்பட்ட வெள்ளி கட்டிகள், பணம் ஆகியவை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் கர்னூல் அருகே தெலங்கானா ஆந்திரா எல்லைப் பகுதியில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஆந்திரா போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்றில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அதில் பயணித்த கோவிந்தராஜூ என்பவவர் வைத்திருந்த கைப்பையில் இருந்து வெள்ளிக் கட்டிகள், பணம் ஆகியவை இருப்பது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஹைதராபாத்தில் இருந்து வெள்ளி கட்டிகளை வாங்கி சேலம் நகரில் உள்ள நகை கடைக்கு எடுத்துச் செல்வது தெரிய வந்துள்ளது.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அவர் வைத்திருந்த 11 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 16 லட்ச ரூபாய் மதிப்புள்ள வெள்ளி கட்டிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 400

1

0