“திருக்குறளின் கருத்து ஆழத்தால் திகைத்துப் போனேன்”..! திருக்குறள் படித்து வருவதாக ராகுல் காந்தி ட்வீட்..!

26 February 2021, 3:39 pm
Rahul_Gandhi_UpdateNews360
Quick Share

திருக்குறள், பாரதியார் பாடல்கள், புறநானூறு என பிரதமர் மோடி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போன்றோர் தமிழின் பழம் பெருமையை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து பறைசாற்றி வரும் நிலையில், இது சமீப காலத்தில் மிகவும் அதிகரித்துள்ளது.

முன்னதாக, நேற்று கோவை கொடிசியா அரங்கில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வணக்கம் என்று தமிழில் கூறி பேசத் தொடங்கினார்.

அப்போது, திருக்குறளில் வரும் “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” எனும் குறளை மேற்கோள் காட்டி, விவசாயம் குறித்து பேசினார். 

அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்த விழாவில் பேசியபோது, “கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார்.

பாஜக தலைவர்கள் தொடர்ந்து தமிழ் மற்றும் தமிழின் தொன்மையான இலக்கியங்கள் குறித்து பேசி வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் தமிழ் அஸ்திரத்தைக் கையிலெடுத்துள்ளார்.

இன்று ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், “திருக்குறள் படித்து வருகிறேன். அதன் கருத்து ஆழத்தால் திகைத்துப் போனேன்” என்று தெரிவித்துள்ளார். மேலும், “திருக்குறளை கேட்க கேட்க, உங்கள் காத்து அதை புரிந்து கொள்ளும்.” என்று தெரிவித்துள்ளார்.

Views: - 10

0

0