கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று சொன்னேனா..? அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அந்தர் பல்டி!

14 February 2020, 5:40 pm
Javadekar updatenews360
Quick Share

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பயங்கரவாதி என்று ஒருபோதும் தாம் கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுத்துள்ளார்.

டெல்லி சட்டபை தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக – ஆம் ஆத்மி கட்சிகள்  இடையே கடும் வார்த்தைப் போர் வலுத்தது. இதில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு பயங்கரவாதி; அதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளதாக கூறியிருந்தார்.

மேலும், ஆம் ஆத்மி கட்சி ஷாகீன் பக் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. நாட்டை துண்டாடும் முழக்கங்களுக்கு ஆதரவளிப்பது பயங்கரவாதம் தானே எனவும் பிரகாஷ் ஜவடேகர் சாடியிருந்தார்.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று பேட்டியளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தாம் கெஜ்ரிவாலை ஒருபோதும் பயங்கரவாதி என்று குறிப்பிட்டதில்லை என்று விளக்கம் அளித்தார்.

டெல்லி தேர்தல் முடிவுகளில் இருந்து வெளிப்பட்டிருப்பது, காங்கிரஸ் முற்றிலுமாக தோல்வி அடைந்துவிட்டது என்பது தான்; டெல்லி தேர்தலில் 42 சதவீத வாக்குகளை பாஜக எதிர்பார்த்தது; ஆனால் 39 சதவீதம் தான் கிடைத்தது என்று ஜவடேகர் தெரிவித்தார்.