“சுஷாந்த்திற்காக போதைப்பொருள் வாங்கினேன், அக்கா பணம் கொடுத்தாங்க”..! ஷோயிக் சக்ரவர்த்தி ஒப்புதல் வாக்குமூலம்..?

10 September 2020, 2:28 pm
Rhea_Showik_UpdateNews360
Quick Share

ரியா சக்ரவர்த்தியின் சகோதரர் ஷோயிக் சக்ரவர்த்தி போதைப்பொருள் வாங்குவதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஷோயிக், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திற்கு அளித்த அறிக்கையில், ஜூன் 14 அன்று தனது மும்பை பிளாட்டில் இறந்து கிடந்த சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்காக அவர் போதைப்பொருட்களை வாங்குவதாகக் கூறினார்.

ஷோயிக் தனது சகோதரி ரியா சக்ரவர்த்தி தான், போதைப்பொருட்களுக்கு பணம் செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை போதைப் பொருட்கள் சட்டத்தின் பிரிவு 67’ன் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தனது அறிக்கையில், சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் வீட்டிற்கு போதைப்பொருட்களை பல சந்தர்ப்பங்களில் ஏற்பாடு செய்ததாக ஷோயிக் கூறினார். எனினும், சுஷாந்திடம் கேட்டபின் தான் அவ்வாறு செய்தேன் என்று கூறினார். சுஷாந்த் அடிக்கடி மரிஜுவானாவை கேட்பார் என்று ஷோயிக் கூறினார்.

மார்ச் மாதத்தில், பசித் பரிஹார் அவரை ஜைத் விலாட்ராவுக்கு அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் பாந்த்ராவில் உள்ள ஒரு உணவகத்திற்கு வெளியே சாமுவேல் மிராண்டாவுக்கு ஒரு பையில் மரிஜுவானா கொடுத்தார் என்றும் ரியாவின் சகோதரர் கூறினார்.

இதற்கிடையில், நடிகை ரியா சக்ரவர்த்தி தனது ஜாமீன் மனுவில் என்சிபி காவலில் கட்டாயப்படுத்தி வாக்குமூலம் பெற்றதாகக் கூறியுள்ளார். தனது காதலன் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கு தொடர்பான விசாரணையின் போது வெளிவந்த போதைப்பொருள் கோணத்தில் பங்கு வகித்ததாக போதைப்பொருள் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட பின்னர் ரியா என்.சி.பி.’யால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரியா, 20 பக்க ஜாமீன் விண்ணப்பத்தில், தன்னை நிரபராதி என்று கூறி, தான் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்றும் தன் மீது பொய்யாக குற்றம் சாட்டியதாக தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0