ஜாதி அடிப்படையில் அரசியல் கட்சிகள் துவக்கப்படுவதை ஆதரிக்க மாட்டேன்: நிதின் கட்கரி…!!

30 November 2020, 2:07 pm
Nithin_Gadkari_UpdateNews360
Quick Share

நாக்பூர்: அரசியல் கட்சிகளில் ஜாதி பிரிவுகள் இருப்பதால் எவ்வித பயனும் இல்லை என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிதின் கட்கரி கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நிதின் கட்கரி கூறியதாவது, அரசியல் கட்சிகளில் ஜாதி மதம் உட்பட எந்த அடிப்படையிலும் பிரிவுகள் துவக்கப்படுவதை ஆதரிக்க மாட்டேன். ஜாதி மதத்தை விட திறமை தான் ஒருவருக்கு முக்கியம்.

பாஜகவில் ஜாதி மத பிரிவுகள் உள்ளன. ஆனால் பா.ஜ.க.வில் இந்த பிரிவுகளுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. திறமையும் உழைக்கும் திறனும் உள்ளவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கட்சியில் பொறுப்பும் முக்கியத்துவமும் அளிக்கப்படுகிறது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Views: - 14

0

0