1st டோஸ் கோவிஷீல்டு… 2nd டோஸ் கோவேக்சின் : ஆய்வு செய்ய இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி…!!

Author: Babu Lakshmanan
11 August 2021, 10:46 am
Quick Share

டெல்லி ; 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்திக் கொள்வதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று வைரஸ் எதிர்ப்பு மருந்தாக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு உள்நாட்டு தயாரிப்பு தடுப்பூசிகளும், ஸ்புட்னிக் தடுப்பூசியும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்திய தடுப்பூசிகளை இரு டோஸ்களாக செலுத்தும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது, ஒரு தடுப்பூசியை முதல் தவணை செலுத்தி, குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் அதே தடுப்பூசியை 2-வது தவணை செலுத்திக்கொள்ள வேண்டும்.

இதனிடிடையே, முதல் தவணையிலும், 2-வது தவணையிலும் வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளை கலந்து செலுத்துவதற்கான ஆய்வுக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாடு ஆணையம் இன்று அனுமதி அளித்துள்ளது.

Views: - 324

0

0