நீங்க ஹிஜாப் அணிந்தால் நாங்க காவி அணிவோம் : கர்நாடக பியூ கல்லூரிகளில் இஸ்லாமிய மாணவிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2022, 5:13 pm
Hijab Vs Saffron -Updatenews360
Quick Share

பெங்களூரு : கர்நாடகாவில் பியூசி கல்லூரிகளில் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிந்து வகுப்பிற்கு வருவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் கடந்த சில நாட்களாக நடத்தி வந்த போராட்டம் காரணமாக, பியூ (PU) கல்லூரிகளில் இஸ்லாமிய மாவிகள் ஹிஜாப் அணியகூடாது என கல்லூரி நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அதாவது பியூ கல்லூரிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு படிக்கும் இஸ்லாமிய பெண்கள் ஹிஜாப் அணிய இந்து அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மங்களூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவ, மாணவியர் சிலர் காவி உடை அணிந்து வந்தனர். இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என போராட்டம் நடத்தினர்.

hijab row in Karnataka escalates as boys wear saffron scarfs in protest

இந்த போராட்டம் சிக்மங்களூரில் இருக்கும் மற்றொரு கல்லூரியிலும் நடைபெற்றது. இந்த போராட்டம் தொடர்ச்சியாக கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு பியூ கல்லூரிகளிலும் நீடித்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள பெரும்பாலான பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதனால் உடுப்பியில் இருக்கு அரசு பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகளை ஒரு மாதமாக கல்லூரிக்குள் அனுமதிக்காமல் தடுத்து வைக்கப்பட்டனர். இதனால் பியூ கல்லூரிகளில் பதற்றமான சூழ்நிலையே உருவாகியிள்ளது.

பியூ மட்டுமல்லாமல் யூஜி, பிஜி கல்லூரிகளிலும் இதே கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சிவமொக்காவில் உள்ள எம்பி கலை அறிவியல் கல்லூரியிலும் இதே போல் இந்து மாணவர்கள் போராட்டத்தால் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று உடுப்பியில் உள்ள குண்டபுரா அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிந்த மாணவிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு இஸ்லாமிய மாணவிகள் 46 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதை எதிர்த்து ஆர்எஸ்எஸ் மாணவர்கள் பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து அமைப்பை சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் காவி துண்டு அணிந்து வந்து போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்த அறிந்த சம்பவ இடத்திற்கு வந்த பாஜக எம்எல்ஏ ஹலடி ஸ்ரீனிவாஸ் இஸ்லாமிய மாணவிகளின் பெற்றோருக்கு ஹிஜாப் அணியாமல் கல்லூரிக்கு உங்கள் பிள்ளைகளை அனுப்ப வேண்டும் என அறிவுரை வழங்கி இருக்கிறார். ஆனால் இதற்கு பெற்றோர்கள் மறுத்துள்ளனர்.

இதையடுத்து இன்று இங்க ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் 46 பேரும் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டனர். கல்லூரியின் தலைமையாசிரியருடன் மாணவிகள் கெஞ்சிக் கேட்டுள்ளனர். படிப்பு கெடுது சார், ப்ளீஸ் எங்களை உள்ளே விடுங்க, பரீட்சை எழுத ரெண்டு மாதம்தான் இருக்கு என மாணவர்கள் கண்ணீர் விட்ட படி கதறியழுதனர்.

ஆனால் மாணவிகள் கண்ணீர் விட்டு அழுத போதும் அதை கேட்காமல் அந்த கல்லூரி தலைமையாசிரியர் கல்லூரி கதவை பூட்டியுள்ளார். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கர்நாடகா பியூ கல்லூரிகளில் நடக்கும் இந்த புதிய கட்டுப்பாடு தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை கர்நாடக கல்வித்துறை அமைச்சர் இந்த சர்ச்சை குறித்து எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

Views: - 650

0

0