கள்ளக்காதலனுடன் கசமுசா.. கண்கூடாய் பார்த்த கணவன் : அரசு ஊழியரின் கழுத்தை நெறித்த மனைவி, கள்ளக்காதலன்!!

Author: Udayachandran
1 August 2021, 3:11 pm
Illegal Contact Murder - Updatenews360
Quick Share

ஆந்திரா : கள்ளக்காதலனுடன் சேர்ந்து கலெக்டர் அலுவலக ஊழியரான கணவனை கொலை செய்த மனைவியை போலீசா கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஊழியராக பணி செய்து வருபவர் வாசு. அவருடைய மனைவி சொப்னபிரியா. இந்த நிலையில் சொப்னபிரியாவுக்கும் மணிகண்டன் என்பவருக்கும் ரகசிய தொடர்பு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 29ஆம் தேதி பணி முடிந்து வீடு திரும்பிய வாசு குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சொப்னபிரியா,வாசு ஆகியோருக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இரவு 11 மணியளவில் மணிகண்டனை தொலைபேசியில் அழைத்த சொப்னப்பிரியா வீட்டிற்கு வந்து என்னை கொலை செய் அல்லது என்னுடைய கணவனை கொன்று விடு என்று கூறியுள்ளார்.

குடிபோதையில் வீட்டிற்கு வந்த மணிகண்டன் தூங்கிக்கொண்டிருந்த வாசு கழுத்தில் செல்போன் சார்ஜர் வயரை போட்டு இறுக்கி அவரை கொலை செய்து தப்பி சென்றுவிட்டார். இந்நிலையில் தன்னுடைய கணவன் மாரடைப்பால் மரணம் அடைந்துவிட்டார் என்று சொப்னப்பிரியா உறவினர்களிடம் கூறி நாடகமாடினார்.

சந்தேகத்தின் பெயரில் வாசு குடும்பத்தார் போலீசாருக்கு தகவல் அளித்தனர். போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் வாசுவின் கழுத்தை பிளாஸ்டிக் வயரால் அழுத்தி கழுத்து எலும்புகள் முறிக்கப்பட்ட தால் அவர் மரணம் அடைந்திருப்பது தெரியவந்தது. எனவே சொப்ன ப்ரியா மீது சந்தேகம் அடைந்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின்போது மணிகண்டன் உதவியுடன் தன்னுடைய கணவனை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். எனவே சொப்னப்பிரியா, மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Views: - 464

0

0