சீன மோதலில் உயிரிழந்த திபெத்திய வீரர்..! இறுதி அஞ்சலி செலுத்த லடாக்கில் ஒன்று கூடிய இந்தியர்கள்..!

7 September 2020, 1:04 pm
tibetan_force_ssf_updatenews360
Quick Share

திபெத் குறித்து சீனாவுக்கு விடுக்கப்படும் ஒரு செய்தியாக, லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த லே மக்கள் ஒன்று கூடி, திபெத்திய ஜவானுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். அவர் சமீபத்தில் லடாக் எல்லையில் சீனாவுடன் நடந்த மோதலில் இறந்தார்.

சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப்) பட்டாலியனின் தலைவர் நைமா டென்சிங் ஆகஸ்ட் 31 அன்று சுஷூலில் உள்ள குருங் மலையில் 1962’ஆம் ஆண்டில் போடப்பட்ட கண்ணிவெடியில் இறங்கியபோது உயிர் இழந்தார்.

அவரது மரணம் குறித்து இந்திய ராணுவம் செய்தி வெளியிட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, லடாக்கில் உள்ள திபெத்திய சமூகம் ஒன்று கூடி ‘7 விகாஸ்’ பட்டாலியனின் சிப்பாய்க்கு அஞ்சலி செலுத்தியது. டென்சிங்கின் உடல் லேவில் உள்ள சோனாம்லிங் திபெத்திய அகதிகள் குடியேற்றத்தில் உள்ள அவரது வீட்டிற்கு ஒரு எஸ்.எஃப்.எஃப் டிரக் மூலம் அழைத்துச் செல்லப்பட்டது.

சிறப்பு எல்லைப்படை அதிகாரியின் (என்.சி.ஓ) துயர மரணம், இந்தியா தனது இரகசிய திபெத்திய துணை ராணுவப் படையை சீனாவுடனான எல்லையில் நிறுத்தியுள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறது. இது சமீபத்திய ஆண்டுகளில் முதல் முறையாகும்.

இந்த ஆண்டு மே மாதம் சீன ஊடுருவல்களுக்குப் பிறகு லடாக்கில் எஸ்.எஃப்.எஃப் வீரர்களை அனுப்புவது தொடங்கியது என்று கூறப்படுகிறது. சீன இராணுவத்தின் நிலைப்பாடுகளைக் கண்காணிப்பதற்காக இராணுவம் சிறப்புப் பிரிவுகளை அமைத்து, முக்கிய இடங்களில் தங்களுடைய நிலைகளை அமைத்துள்ளது.

முன்னதாக செப்டம்பர் 2’ம் தேதி, எஸ்.எஃப்.எஃப் பற்றி கேட்டபோது, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுனிங், “சீனாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. திபெத்திய சுதந்திரம் குறித்து வாதிடும் சக்திகளுக்கு வசதியையும் இடத்தையும் வழங்கும் எந்த ஒரு நாட்டையும் நாங்கள் எதிர்க்கிறோம். நிச்சயமாக, இந்தியாவும் இதில் அடங்கும்.” எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு எல்லைப் படை (எஸ்.எஃப்.எஃப்)   என்றால் என்ன?
எஸ்.எஃப்.எஃப் என்பது திபெத்திய இனத்தினரால் நிர்வகிக்கப்படும் ஒரு புதிரான துணை ராணுவப் பிரிவாகும். இது விகாஸ் பட்டாலியன் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் விகாஸ் பட்டாலியன்களின் எண்ணிக்கை ஒன்று முதல் ஏழு வரை உள்ளது. இது பாதுகாப்பு இயக்குநரகம் (டிஜிஎஸ்) என்ற இரகசிய அமைப்பின் கீழ் நேரடியாக பிரதமரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.

டி.ஜி.எஸ் மற்றும் எஸ்.எஃப்.எஃப் இரண்டும் 1962’ஆம் ஆண்டில் திபெத்திய தன்னாட்சி பிராந்தியத்திற்குள் கொரில்லாப் போரை நடத்துவதற்காக சீனாவுடனான எல்லைப் போரின் இறுதி கட்டங்களில் அமைக்கப்பட்டன.

சிறப்புப் படை அமைச்சரவை செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. மேலும் கடினமான நிலப்பரப்புகளில் இந்திய இராணுவத்துடன் இணைந்து போராடுகிறது.

1,50,000 வலுவான திபெத்திய புலம்பெயர்ந்தோரிடமிருந்து எஸ்.எஃப்.எஃப் வீரர்களை தேர்ந்தெடுத்து பணியமர்த்துகிறது. இவர்கள் பெரும்பாலும் இந்தியாவில் குடியேறிய திபெத்திய அதிகாரிகள் உள்ளனர். இது கிட்டத்தட்ட 5,000 துருப்புக்களுடன் ஆறு பட்டாலியன்களைக் கொண்டுள்ளது. அதிகாரப்பூர்வ பதிவுகள் எதுவும் வெளியிடப்படாததால், அதன் வீரர்களின் எண்ணிக்கை குறித்த விபரம் அதிகாரப்பூர்வமானது அல்ல.

1971 பங்களாதேஷ் போரின்போது சிட்டகாங்கில் பாகிஸ்தான் படைகளையும், 1984’இல் ஆபரேஷன் புளூஸ்டாரையும், 1984’இல் சியாச்சின் பனிப்பாறை கைப்பற்றும் பணியிலும், 1999’இல் பாகிஸ்தானுக்கு எதிரான கார்கில் போரிலும் சிறப்புப் படை முக்கிய பங்கு வகித்துள்ளது.

Views: - 0

0

0