இரு அவைகளிலும் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்: குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

Author: Udhayakumar Raman
2 December 2021, 11:18 pm
Parliament_UpdateNews360
Quick Share

டெல்லி: அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டெல்லியில், பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29-ந்தேதி தொடங்கியது. இக்கூட்டமானது டிச.23-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. முதல் நாளிலேயே மூன்று வேளாண் சட்டம் ரத்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அன்றைய தினமே சட்டமாக நிறைவேற்றப்பட்டது.இதனை தொடர்ந்து இன்று, அணை பாதுகாப்பு மசோதா மக்களவையை தொடர்நது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீண்ட விவாதத்திற்கு பின், மாநிலங்கவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்படவுள்ளது.

Views: - 141

0

0