மற்றொரு மேற்கு வங்க அமைச்சரும் ராஜினாமா..! மம்தா பானர்ஜியின் முதல்வர் கனவு பணால்..?

By: Sekar
5 January 2021, 4:46 pm
laxmi_ratan_sukla_updatenews360
Quick Share

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு புதிய பின்னடைவாக, திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான லக்ஷ்மி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

ஹவுராவில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பதவியில் இருந்தும் லக்ஷ்மி ரத்தன் சுக்லா விலகியுள்ளார்.  39 வயதான சுக்லா கிரிக்கெட் வீரராக மேற்கு வங்க ரஞ்சி அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மம்தாவின் நெருங்கிய உதவியாளர் சுவேந்து ஆதிகாரி உட்பட பல திரிணாமுல் தலைவர்கள் கட்சியை விட்டு வெளியேறி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த சில நாட்களுக்கு பின்னர் சுக்லாவின் ராஜினாமா வந்துள்ளது மேற்கு வங்க அரசியலில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுக்லா தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், அதன் நகலை ஆளுநர் ஜகதீப் தங்கருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஹவுராவின் எம்.எல்.ஏ சுக்லா, மம்தா பானர்ஜிக்கு எழுதிய தனது ராஜினாமா கடிதத்தில் அரசியலில் இருந்து ஓய்வு பெற விருப்பம் தெரிவித்ததாக திரிணாமுல் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால் மம்தா பானர்ஜி மீதான அதிருப்தி காரணமாகத்தான் அவர் ராஜினாமா முடிவை எடுத்துள்ளார் என்றும், விரைவில் பாஜக பக்கம் தாவலாம் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது.

ஏற்கனவே மக்கள் மத்தியில் செல்வாக்கு கடுமையாக சார்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு தலைவராக கட்சியை விட்டு வெளியேறுவது மீண்டும் முதல்வராகும் கனவில் உள்ள மம்தா பானர்ஜிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Views: - 51

0

0