அமெரிக்கா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி உலகளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா முதலிடம்: ஒரே நாளில் 1,52,879 பேருக்கு தொற்று!!

11 April 2021, 11:06 am
Corona_India_Updatenews360
Quick Share

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.69 லட்சத்தை நெருங்கியுள்ளது. அதே போல், பாதிப்பு 1.33 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,52,879 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,33,58,805 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 839 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,69,275 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 90,584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,20,81,443 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 11,08,087 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 10,15,95,147 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் இதுவரை 25,66,26,850 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியா முழுவதும் நேற்று 14,12,047 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா, பிரேசிலை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Views: - 23

0

0