101 பொருட்கள் இறக்குமதிக்குத் தடை..! பாதுகாப்புத் துறையில் சுயசார்பு..! ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு..!

9 August 2020, 11:10 am
Rajnath_Singh_UpdateNews360
Quick Share

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ஆத்மநிர்பர் அல்லது சுய சார்பு முயற்சிக்கு இந்தியா இப்போது தயாராக உள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்தார்.

“பாதுகாப்பு அமைச்சகம் இப்போது ஆத்மநிர்பர் பாரத் முயற்சியில் ஒரு பெரிய உந்துதலுக்கு தயாராக உள்ளது. பாதுகாப்பு உற்பத்தியின் உள்நாட்டுமயமாக்கலை அதிகரிப்பதற்காக கொடுக்கப்பட்ட காலக்கெடுவுக்கு அப்பால் 101 பொருட்களுக்கு இறக்குமதி தடையை பாதுகாப்பு அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளது” என்று ராஜ்நாத் சிங் ட்விட்டரில் அறிவித்தார்.

“பிரதமர் நரேந்திரமோடி, ஐந்து தூண்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு சுயசார்பு இந்தியாவுக்கு தெளிவான அழைப்பை விடுத்துள்ளார். அதாவது பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, மக்கள்தொகை மற்றும் தேவை மற்றும் செல்ப் ரிலையண்ட் இந்தியாவுக்கான சிறப்பு பொருளாதார தொகுப்பை ஆத்மநிர்பர் பாரத் என்ற பெயரில் அறிவித்துள்ளார்.” என்று அவர் மேலும் ட்வீட் செய்துள்ளார்.

“பிரதமர் மோடியின் அறிவிப்பில் இருந்து குறிப்புகளை எடுத்துக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சகம் 101 பொருட்களின் பட்டியலைத் தயாரித்துள்ளது. அந்த பட்டியலில் உள்ள பொருட்களுக்கான இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இது பாதுகாப்பில் சுயசார்பை அடைவதற்கு மிகப்பெரிய படியாகும்.” என்று அவர் ட்விட்டரில் கூறினார்.

“இந்த முடிவு இந்திய பாதுகாப்புத் துறையினருக்கு பட்டியலில் உள்ள பொருட்களை அவற்றின் சொந்த வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு திறன்களைப் பயன்படுத்துவதன் மூலம் அல்லது ஆயுதப்படைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்ய டிஆர்டிஓ வடிவமைத்து உருவாக்கிய தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கும்.” என்று சிங் கூறினார். .

ஆயுதப்படைகள், பொது மற்றும் தனியார் தொழில் உட்பட அனைத்து தரப்பினருடனும் பல சுற்று ஆலோசனைகளுக்குப் பிறகு 101 பொருட்களின் பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் தயாரித்துள்ளது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார்.

ஏப்ரல் 2015 மற்றும் ஆகஸ்ட் 2020’க்கு இடையில் ஏறக்குறைய 260 திட்டங்கள் முத்தரப்பு சேவைகளால் ரூ .3.5 லட்சம் கோடி செலவில் ஒப்பந்தம் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் அடுத்த 6 முதல் 7 ஆண்டுகள் வரை உள்நாட்டுத் தொழில்துறைக்குள் வைக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.” என்று ராஜ்நாத் சிங் ட்வீட் செய்துள்ளார்.

“தடைசெய்யப்பட்ட 101 பொருட்களின் பட்டியலில் எளிமையான பாகங்கள் மட்டுமல்லாமல் பீரங்கி துப்பாக்கிகள், தாக்குதல் துப்பாக்கிகள், கொர்வெட்டுகள், சோனார் அமைப்புகள், போக்குவரத்து விமானங்கள், எல்.சி.எச்., ரேடார்கள் மற்றும் பல உயர் தொழில்நுட்ப ஆயுத அமைப்புகளும் உள்ளன.” என்று தன்னுடைய டிவீட்டில் மேலும் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி மீதான தடை 2020 முதல் 2024’க்கு இடையில் படிப்படியாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ராஜ்நாத் சிங் மேலும் கூறினார்.

Views: - 11

0

0