கேரளாவில் 12,161 பேருக்கு கொரோனா: 25 ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை
Author: kavin kumar29 September 2021, 8:27 pm
கேரளாவில் இன்று 12,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டன. எனினும், சமீப நாட்களில் இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றன. இந்த நிலையில், கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்தும் குறைந்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,161 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 17,862 பேர் குணமடைந்த நிலையில் கொரோனாவால் 155 பேர் உயிரிழந்த நிலையில் மொத்த உயிரிழப்பு 24,965 ஆக உயர்வடைந்து உள்ளது.
Views: - 276
0
0