நகரும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்: கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய ‘சூப்பர் ஹீரோ’..!!

5 May 2021, 4:18 pm
train rescue - updatenews360
Quick Share

திருப்பதி: நகரும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை கண்ணிமைக்கும் நேரத்தில் காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

திருப்பதியில் உள்ள புத்தர் ரயில் நிலையத்தில் இன்று ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் சதீஸ் என்பவர் பணியில் இருந்தார். அப்போது திருப்பதிக்கு சென்று கொண்டிருந்த திருமலா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டி ஒன்றில் இருந்து பெண் ஒருவர் கீழே இறங்க முயன்றுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ரயில் புறப்பட்டு சென்றது.

இதனால் அந்தப் பெண் தவறி விழுந்து பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே சிக்கி கொள்ள வேண்டிய ஆபத்தான நிலை ஏற்பட்டது. இதனை கவனித்த போது ரயில்வே கான்ஸ்டபிள் சதீஷ் கண்ணிமைக்கும் நேரத்தில் ஓடிச்சென்று அந்தப் பெண்ணுக்கு ஆபத்து ஏற்படாத வகையில் காப்பாற்றினார்.

இந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பெண்ணின் உயிரை காப்பாற்றிய ரயில்வே காவலருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 230

0

0