பாஜக எம்எல்ஏக்கள் அமளி: மேற்கு வங்கத்தில் ஆளுநர் உரை இன்றி தொடங்கியது சட்ட பேரவை கூட்டம்….!!!

6 February 2021, 11:05 am
mamtha
Quick Share

கொல்கத்தா: ஆளுநரின் உரை இல்லாமல் சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் நடப்பாண்டின் முதலாவது சட்ட பேரவை கூட்ட தொடர் கொல்கத்தாவில் தொடங்கியது. பொதுவாக அனைத்து மாநில அரசும் ஆளுனர் உரையுடன் தொடங்குவது வழக்கம். ஆனால் மேற்கு வங்கத்தில் மத்திய அரசு மற்றும் ஆளுனருடன், மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் உள்ள நிலையில், ஆளுநரை உரையாற்ற மேற்கு வங்க அரசு அழைப்பு விடுக்கவில்லை என கூறப்படுகிறது.

ஆளுநரின் உரை இல்லாமல் சட்டப்பேரவை கூட்ட தொடர் தொடங்கிய நிலையில், கூட்டத்தில் கலந்து கொண்ட பாஜக எம்.எல்.ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மேலும், மாநில அரசின் செயல்பாடுகளை கண்டித்து எதிர்கட்சிகளான இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் இந்த கூட்டத்தொடரையே புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 1

0

0